வளமான வாழ்க்கை
 
நாம் அனைவரும் விரும்புவது மகிழ்வான இன்பமான வாழ்வையே. நாம் மட்டுமல்ல, இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களும் துன்பமில்லாத வாழ்க்கையையே வாழ விரும்புகின்றன. விஞ்ஞானிகள் கூறுவதைச் சற்று உற்று நோக்கினால் உணவுச் சங்கிலி குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும். மனிதன் மட்டுமே பகுத்தறிவு உள்ளவனாக அறியப்படுகின்றான். அதனால் மற்ற உயிரினங்களுக்கு பாதுகாவலனாக இன்றைய விஞ்ஞானிகளால் அவன் அறியப்படுகிறான். ஆனால் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற வாக்கிற்கு இணங்க ஆராய்ந்தால், மனிதன் எவற்றையும் காத்திட இயலாது. மாறாக அவனது வாழ்வு இயற்கையோடு இயைந்ததாக அமைந்துவிடுமானால், மனிதனுடன் மற்ற உயிரினங்களும் சுகமாக வாழ இயலும். இதனை உணர்த்தவே பகவான் மகாவீரர் 'வாழு வாழ விடு' என்ற உயர்ந்த உத்தமமான மந்திரச் சொல்லை உலகினுக்கு செய்தியாக விடுத்துள்ளார்!

Comments