சி றுகதை தந்திரம் சூரியசந்திரன் ஆடிட்டராக தொழில் செய்து வந்தான். தொழில் மூலம் அந்தஸ்து கிடைத்ததால் ஊரில் நல்ல மரியாதைக்கு அவனுக்கு இருந்தது. அவனைத்தேடி புதிதாக தொழில் தொடங்குவோர் வருவது வழக்கம். அப்படி வந்தவன்தான் சக்திகாந்தன். ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் இருந்து பிழைப்பு தேடி வந்தவன். இரும்பு சாமான்களை மொத்தமாக வாங்கி சில்லரையாக வியாபாரம் செய்யும்படி சூரியசந்தின் கூற, சக்திகாந்தன் அவ்வாறே வாடகைக்கு ஓர் இடம் பிடித்து கடை நடத்தி வந்தான். சக்திகாந்தனின் கடை ஆடிட்டர் வீடு இருந்த தெருவிலேயே இருந்தது. வியாபாரம் பெருகியது. மனைவியும் ஒர் ஆண் குழந்தையோடும் வந்த சக்திகாந்தனுக்கு மேலும் ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். அதே சமயம் ஆடிட்டர் சூரியசந்திரன் தன் நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கினான். பெரும் முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் லாபத்தைத் தரவில்லை. லாபத்திற்கு பதிலாக பெரும் நட்டத்தைத் தந்தது. அதனால் தனது வீட்டை விட்டுத் தொலைவில் வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டு சென்று வ...
Search This Blog
valamana vazhkai