சிறுகதை
காமதேனு
"என்னங்க... மரத்த வெட்ட ஆள் வந்திருக்காங்க" மரகதம் தன் கணவனிடம் சொன்னாள்.
செய்தித்தாளை மடித்து வைத்த மாதவன் முகத்தில் கவலை படர்ந்தது. "எத்தனை வருஷமா நம்ம கண் முன்னயே வளர்ந்த மரம்...அதை இன்னக்கி வெட்டப்போறோம்னு நினைச்சாலே மனசு பொறுக்கல மரகதம்..." வாசலில் காம்பவுண்ட் ஓரம் ஓங்கி வளர்ந்து நின்றிருந்த மாமரத்தைப் பார்த்தபடியே நின்றான் மாதவன்.
" ஏங்க... இன்னொரு முறை பக்கத்து வீட்டு அண்ணன் கிட்ட பேசிப் பாருங்களேன்...அவர் மனசு மாறினாலும் மாறலாமில்லே..."
நேற்று மோகன் மிகவும் கறாராகப் பேசியது நெஞ்சில் நிழலாடியது."இதோ பாருங்க மாதவன்...உங்க வீட்டு மாமரம் காம்பவுண்ட தாண்டி எங்க வீட்டுக்கு மேல வளர்ந்து நிக்குது. எங்க வீட்டு அழகையே கெடுக்கற மாதிரி இருக்கு.. இலையெல்லாம் எங்க வீட்டில் கொட்டி ஒரே குப்பை... பத்தாக்குறைக்கு மரத்திலேருந்து எறும்பு வேற...மரத்தை வெட்டுங்கன்னு உங்ககிட்ட நானும் பலமுறை சொல்லிட்டேன்...நீங்க காதுல போட்டுகிட்ட மாதிரியே தெரியல...நான் வேற மாதிரி யோசிச்சி வெச்சிருக்கேன்.. நீங்க வருத்தப்படற நிலமை ஏற்படும்... ஆமா சொல்லிட்டேன்."
அக்கம் பக்கத்து வீட்டுக்கார்களோடு எதற்காகவும் பிரச்சினை வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைப்பவன் மாதவன். ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி காலம் கடத்திப் பார்த்துவிட்டு கடைசியில் வேறு வழி தெரியாமல் மரத்தை வெட்ட ஆட்களுக்கு முன்பணம் கொடுத்து விட்டான்.
"இப்போ திடீர்னு அவன் மனசு மாறிடும்னு நீ நம்புறியா மரகதம்... நாய்க்குக் கூட நன்றி விசுவாசம் இருக்கு... ஆனா இவனுக்கு?... சீசன்ல விளையற காய்களை மட்டும் தாராளமா பறிச்சி சாப்பிடறான்... ஆனா...வீட்ல குப்பை கொட்டினா அள்ளிப் போட வலிக்கிதாம் அவனுக்கு..."புலம்பியபடி மாதவன் ஆட்களை நெருங்கினான்.
மரத்தை வெட்டிச் சாய்ப்பதற்காக ஆட்கள் தயாரானார்கள்.
அப்போதுதான், " மிஸ்டர் மாதவன்.... மரத்தை வெட்ட வேண்டாம்... ப்ளீஸ்..." என்று கூச்சலிட்டபடியே மோகன் ஓடிவந்தான்.
மாதவனுக்கு வியப்பின் உச்சிக்கு சென்றான். மோகனா மரத்தை வெட்ட வேண்டாம் என்கிறான்? தன் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான்.
" மாதவன் உங்களை ரொம்ப சங்கடப் படுத்திட்டேன்... வெரி சாரி...எங்க வீட்டை போட்டோ எடுத்து ஒரு போட்டிக்கு அனுப்பியிருந்தேன். 'இயற்கை எழில் கொஞ்சும் வீடு'ன்னு... முதல் பரிசு கிடைச்சிருக்கு...அந்த பரிசு கிடைக்க உங்க வீட்டு மாமரம்தான் முதல் காரணம்!...இப்போதான் இமெயில் பார்த்தேன்! உங்களுக்கு நன்றி சொல்லத்தான் ஓடி வந்தேன்."
மரத்தின் தேவை மனிதனுக்கு எப்போதும் உண்டு. ஆனால் மரங்களுக்கோ மனிதன் தேவையில்லை!
சிந்திப்போம்! செயல்படுவோம்!
" மாதவன் உங்களை ரொம்ப சங்கடப் படுத்திட்டேன்... வெரி சாரி...எங்க வீட்டை போட்டோ எடுத்து ஒரு போட்டிக்கு அனுப்பியிருந்தேன். 'இயற்கை எழில் கொஞ்சும் வீடு'ன்னு... முதல் பரிசு கிடைச்சிருக்கு...அந்த பரிசு கிடைக்க உங்க வீட்டு மாமரம்தான் முதல் காரணம்!...இப்போதான் இமெயில் பார்த்தேன்! உங்களுக்கு நன்றி சொல்லத்தான் ஓடி வந்தேன்."
மரத்தின் தேவை மனிதனுக்கு எப்போதும் உண்டு. ஆனால் மரங்களுக்கோ மனிதன் தேவையில்லை!
சிந்திப்போம்! செயல்படுவோம்!
Comments
Post a Comment