சிறுகதை
பாரம்பரியம்
"நாம் எல்லோரும் கிராமத்திற்கு பயணம் செல்லப் போகிறோம்!"
ஆசிரியரின் அறிவிப்பு மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது! "ஓ...." என்று பெரும் குரல் கொடுத்து தங்களது மனத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்!
"அங்கே உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களைக் கட்டுரை வடிவில் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் தேவையான உபகரணங்களோடு நாளை வந்துவிடுங்கள்! உங்கள் பெற்றோரின் அனுமதிக் கடிதம் அவசியம்."
மறுநாள் மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். பேருந்து ஒன்று அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தில் பாட்டுப் பாடியவாறு சென்றனர்.
நகரத்தைத் தாண்டியதுமே மரங்கள் அடர்ந்த சாலையில் பேருந்து பயணித்தது. ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் மலை கிராமஇ மம் ஒன்றை அடைந்தனர்.
அந்த கிராமத்தின் ஊர் தலைவர் அனைவரையும் வரவேற்று சுவையான பதனீர் அளித்தார். மாணவ மாணவியர் ஆசிரியப் பெருமக்களுடன் பதனீரை விரும்பிப் பருகினர்.
பின்னர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அங்கிருந்த இயற்கை எழில் சூழ்ந்த வீடுகளுக்குள் சென்றனர் ஒவ்வொரு குழுவிற்கும் ஆசிரியர் ஒருவரும் சென்றார்.
கலா, மாலா, ரவி, ரகு ஆகிய நால்வரையும் நாம் பின் தொடர்வோமா? இவர்கள் நால்வரோடு ஆசிரியை கோமதியும் ஒரு ஓலை வேய்ந்த வீட்டிற்குள் நுழைந்தனர். மூதாட்டி ஒருவர் அவர்களை வரவேற்றார். - வளரும்......
Comments
Post a Comment