சிறுகதை
கற்க கசடற
"எப்பது விடியும்?" குரு கேட்டார். 'இவ் வினாவிற்கான விடை என்னவாக இருக்கும்?' என சீடர்கள் பலவாறாக சிந்தித்தனர். பிறகு ஒவ்வொரு சீடராக பதிலளிக்கத் தொடங்கினர். முதலாமவன், " தூரத்தில் தெரிவது பனையா அல்லது தென்னையா என்பது கண்களுக்குத் தெளிவாகப் புலப்படும்போது" என்றான். இரண்டாமவன், "தரையில் இருப்பது பாம்பா அல்லது கயிறா என்று தெரியவரும்போது" என்றான். மூன்றாமவன், " குருவே! எதிரே வருபவரை அன்புடன் நோக்கும்போது, உலகில் உள்ள அனைவரையும் சகோதர, சகோதரிகளாக நினைக்கும்போது!" மூன்றாமவனையே சிறந்த சீடனாகத் தேர்ந்தெடுத்தார், குரு!
Comments
Post a Comment