அதிர்ச்சி

சாலையில் போக்குவரத்துக்  காவலரால் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த  காஞ்சனா தடுத்து நிறுத்தப்பட்டாள். தலையில் ஹெல்மெட் இல்லை. ஹெல்மெட் அணிந்திருந்த வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தப்படவில்லை.
காஞ்சனாவிற்கு புரிந்துவிட்டது. 'மாட்டிக்கொண்டோம்' அப்பா வீட்டிலிருந்து கிளம்பும்போதே சொன்னார். 'ஹெல்மெட் போட்டுக்கோம்மா'. அலட்சியப்படுத்திவிட்டு வந்தது எவ்வளவு தவறு என்பது இப்போது புரிந்துவிட்டது அவளுக்கு. காவலர் கொடுத்த சம்மனைப் பெற்றுக் கொண்டு அலுவலகம் சென்றாள். அன்றைய தினம் அவளுக்கு வேலையே ஓடவில்லை. ஆயிரம் ரூபாய் பைன் கட்ட வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். மாலை வீடு வந்து சேர்ந்ததும் தன் அப்பாவிடம் புலம்பித் தீர்த்தாள். இனி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்ட மாட்டேன் என்று தீர்மானமாகத் தெரிவித்தாள். காஞ்சனாவின் அப்பா, "ஹெல்மெட் போட்டால் உனக்கு தானேம்மா நல்லது... ஆனா அதை நீ புரிஞ்சிக்கலையேம்மா... இப்பவாவது நல்ல முடிவை எடுத்தியே அது போதும்மா..."
 "ஆனா அப்பா அதுக்கு தண்டனை ஆயிரம் ரூபாயா?... இது ரொம்ப அதிகம்பா..."
"ஏம்மா...பணம் போனா திரும்ப சம்பாதிச்சிடலாம்...உயிர் போனா திரும்ப வருமா?  எல்லாத்துக்கும் மதிப்பு போடற நீ நீ உன் உயிருக்கு மதிப்பு போட்டியா? உயிர் போனா திரும்ப வருமா?... கொஞ்சம் யோசிச்சி பாரும்மா... "புரியுதுப்பா...என்னோட தப்பை நான் உணர்ந்துட்டேன்...என்னோட சம்பளத்தில 10% இழந்த பின்னாடிதான் தெரியுது...ஹும்..."
"தவற உணர்ந்திட்டியே...அதுவே போதும்மா... நீ பைன் கட்ட வேண்டாம்..."
"என்னப்பா சொல்றீங்க?..."
"ஆமாம்மா...அந்த டிராபிக் போலீஸ் என் ஏற்பாடுதான்...என்னோட நண்பர்தான் அவர்..போதுமா...நான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் உன்னை திருத்திடுச்சி...அது ஒரு டுபாக்கூர் சம்மன்மா"
 (வளரும்)

Comments