சி றுகதை
தந்திரம்
சூரியசந்திரன் ஆடிட்டராக தொழில் செய்து வந்தான். தொழில் மூலம் அந்தஸ்து கிடைத்ததால் ஊரில் நல்ல மரியாதைக்கு அவனுக்கு இருந்தது.
அவனைத்தேடி புதிதாக தொழில் தொடங்குவோர் வருவது வழக்கம். அப்படி வந்தவன்தான் சக்திகாந்தன். ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் இருந்து பிழைப்பு தேடி வந்தவன்.
இரும்பு சாமான்களை மொத்தமாக வாங்கி சில்லரையாக வியாபாரம் செய்யும்படி சூரியசந்தின் கூற, சக்திகாந்தன் அவ்வாறே வாடகைக்கு ஓர் இடம் பிடித்து கடை நடத்தி வந்தான்.
சக்திகாந்தனின் கடை ஆடிட்டர் வீடு இருந்த தெருவிலேயே இருந்தது. வியாபாரம் பெருகியது. மனைவியும் ஒர் ஆண் குழந்தையோடும் வந்த சக்திகாந்தனுக்கு மேலும் ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.
அதே சமயம் ஆடிட்டர் சூரியசந்திரன் தன் நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கினான். பெரும் முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் லாபத்தைத் தரவில்லை.
லாபத்திற்கு பதிலாக பெரும் நட்டத்தைத் தந்தது. அதனால் தனது வீட்டை விட்டுத் தொலைவில் வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டு சென்று விட்டான். சில மாதங்களாக ஆள் எங்கிருக்கிறான் என்ற தகவலே தெரியாமல் இருந்தது.
சக்திகாந்தனிடம் மட்டுமே தான் இருக்கும் இடம் குறித்து தெரிவித்திருந்தான். சூரியசந்திரனுக்குத் தேவையான பொருளாதார உதவிகளையும் சக்திகாந்தன் செய்துவந்தான்.
சக்தி காந்தனுக்கு நல்ல வருமானம் கிடைத்ததால் தான் வாடகைக்கு இருந்த கடையையே எப்படியாவது தனக்கே உரிமையாக்கிக் கொள்ள நினைத்தான்.
ஆனால் கடையின் உரிமையாளரோ கடையைக் காலி செய்யும்படி கூறிவிட்டார். ஆடிட்டர் சூரியசந்திரனோடு ஆலோசனை செய்தான் சக்தி காந்தன். காலி செய்யவேண்டுமானால் ஒரு பெரும் தொகையை கேட்டுப் பெறும்படி சூரியசந்திரன்.
சூரியசந்திரன் இப்படி கூறியதற்கு பின்புலம் இருந்த்து. அதாவது சூரியசந்திரன் தான் வசித்த சொந்த வீட்டை ஒரு ஆசாரியிடம் வாடகைக்கு விட்டிருந்தான். பல வருடங்களாக அவன் குடியிருந்து வந்த படியால் தனது சொந்த வீடாகவே அவன் நினைக்கத் தொடங்கி இருந்தான்.
சூரியசந்திரன் அவனிடம் வீட்டைக் காலி செய்யச் சொன்னபோது அந்த ஆசாரி பெருந்தொகை ஒன்றைக் கேட்க அதிர்ந்துபோனான் ஆடிட்டர். எப்படியோ அவன் கேட்ட தொகையை திரட்டி அவனைக் காலி செய்ய வைப்பதற்குள் விழி பிதுங்கிப் போனான்.
இப்போது அதே தெருவில் சக்தி காந்தன் கடையும் இருப்பதால் தான் ஆசாரியிடம் ஏமாந்தது போன்றே தெருவில் இருக்கும் மற்ற கடை உரிமையாளர்களும் ஏமாற வேண்டும் என நினைத்தான். இதுதான் அந்த பின்புலம். இத்தனைக்கும் சூரியசத்திரனின் உறவினர்தான் சக்தி காந்தனுக்கு வாடகைக்கு தன் கடையைக் கொடுத்திருந்தார்.
இதற்கிடையே சக்தி காந்தன் திடீரென இறந்துவிட, அவனுடைய பெரிய மகன் அலோக் கடையை நடத்தினான். சிறிது காலத்திற்குப்பின் அவனும் திருமணம் செய்துகொண்டு வேறு ஊருக்கு சென்றுவிட அவன் தம்பி விலோக் தொடர்ந்து வியாபாரம் செய்தான். (தொடரும்)

Comments
Post a Comment